6 பேருக்கு எதிராக தீர்மானம் எடுக்க கூடுகிறது மொட்டுக் கட்சி உயர்குழு

0
157

சமகி ஜன சனந்தனவுடன் இணைந்துள்ள 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு நாளை (9ஆம் திகதி) கொழும்பில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 5ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, வசந்த யாப்பா பண்டார, கலாநிதி உபுல் கலப்பட்டி மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் இவ்வாறு கூட்டணி அமைத்தனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதற்குப் பதிலாக, வேறு கட்சியுடன் கூட்டணி வைப்பது கட்சியின் யாப்பை மீறும் செயல் என்று மொட்டு கட்சி கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here