இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து மனோ எழுப்பிய கேள்விக்கு அரசாங்கம் பதில்

0
266

பிரதமர் மோடியுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசாங்க தரப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் கூறுகையில்,

“பிரதமர் மோடியுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் பற்றி அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றிய பின் நான் எழுந்து கேள்வி எழுப்பினேன்.

“இந்தியாவுடன் செய்து கொண்டவை, தீர்க்கமான ஒப்பந்தங்கள் அல்ல. அவை புரிந்துணர்வு உடன்படிக்கைகள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால் அவற்றை பாராளுமன்றத்தில், சமர்பியுங்கள். அதன் மூலம் முழு நாட்டினதும் நம்பிக்கையை பெறுங்கள்.”

“இந்தியாவுடன் உடன்படிக்கை செய்ததன் மூலம், நாட்டை காட்டிக் கொடுப்பதாக எதிர்கட்சியில் சிலர் கூறுவதாக நீங்கள் இப்போது சொன்னீர்கள்.”

“நான் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை. உண்மையில், நீங்கள் இன்று செய்துள்ள உடன்பாடுகளை கடந்த காலத்தில், நாங்கள் செய்ய முயன்ற போது நீங்கள் தான் அன்று நாம் நாட்டை காட்டி கொடுத்து விட்டதாக சொன்னீர்கள்.”

“எனது உரையின் பின் மீண்டும் எழுந்த அமைச்சர் ஹேரத், இந்தியாவுடனான ஒப்பந்தங்களை சபையில் சமர்ப்பிப்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில் பதிலளிப்பதாக பதிலளித்தார்“ என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here