அமெரிக்க கடற்படையின் பிரன்சுவிக் (Brunswick) அதிவிரைவு இராணுவ போக்குவரத்துக் கப்பல் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பல் அமெரிக்க இராணுவத்தின் கட்டளையின் பிரகாரம் விரைவு போக்குவரத்துக்கு பயன்படும் கப்பல் ஆகும்.
இது சிப்பாய்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை விரைவாக கொண்டுசெல்லும் திறன் கொண்டது மற்றும் கப்பலில் சராசரி வேகத்தில் 1,200 கடல் மைல் தூரத்திற்கு 600 டன் உபகரணங்களை கொண்டு செல்ல முடியும்.
திருகோணமலையில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்த இந்த கப்பல் ஏப்ரல் 12ஆம் திகதி அங்கிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
N.S