திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்புதலை நேற்று(08.04.2023) அமைச்சரவை வழங்கியுள்ளது.
தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதற்கமைய திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டமூலம் ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.