ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவில் சந்தித்துள்ளார்.
“ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025” இல் பங்கேற்கச் சென்றிருந்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த மாநாடு புதுதில்லியில் நடைபெறுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார்.