நாட்டில் நிலவும் ஊழலற்ற ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் வீதியில் இறங்கி துணிவுடன் செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது. இந்த அமைப்பை மாற்ற இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எல்லாரும் சேர்ந்து இந்த அரசாங்கத்தை போக சொல்லுங்க, இந்த ஊழல் முறையை ஒழிக்க வீதியில் இறங்கவும் எமக்கு தைரியம் உள்ளது.
இன்று (09) காலை நீர்கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார். “