யாலில் மாணவர்களிடையே பரவும் நோய்

0
137

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு காச நோய் கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென உடல்நல குறைப்பாடுகள் ஏற்பட்டு உடல் மெலிவு ஏற்பட்டது. அதனை அடுத்து மாணவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது , மாணவனுக்கு காச நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து மாணவனுடன் நெருங்கி பழகிய மாணவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது , அவர்களுக்கும் காச நோய் கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து மாணவர்களை கண்காணித்து சிகிச்சை வழங்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here