சீனா செல்லும் இலங்கை குரங்குகள்!

0
245

விவசாய அமைச்சின் கூற்றுப்படி, நாட்டில் அதிகரித்து வரும் குரங்குகள் சனத்தொகைக்கு தீர்வு வழங்கும் வகையில் சீனாவில் இருந்து குரங்குகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கை குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக இலங்கையில் 100,000 குரங்குகளை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய விலங்கியல் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று இணைந்துள்ளதுடன், சபையின் அனுமதியின் பேரில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

வெளிநாட்டுக்கு வளர்ப்பு பிராணிகளை வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை அமைச்சர்கள் ஆராயவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது நமது நாட்டின் குரங்குகள் தொகை 30 லட்சத்தை நெருங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்நாட்டில் பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்குகள் முதன்மையானது.

குரங்குகளின் சனத்தொகையைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ள பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் மற்றுமொரு நாடு குரங்குகளை பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என குறிப்பிடப்பட்டதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here