பிரித்தானிய இளவரசர் ஹேரி அமெரிக்கவாசி

0
144

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் மகனான இளவரசர் ஹேரி, இப்போது அமெரிக்க பிரஜை என்பதை உறுதிசெய்துள்ளார்.

4 ஆண்டுகளுக்கு முன்னர், இளவரசர் ஹேரி தனது மனைவி மேகனுடன், அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் (California) வசிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், இளவரசர் ஹேரி தற்போது அமெரிக்க பிரஜை என்பதை இளவரசரின் பயண நிறுவனம் பிரித்தானிய அதிகாரிகளிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹேரியும் மேகனும், அரச குடும்ப கடமைகளைக் கைவிட்டுவிட்டு, ஊடகத் துறையில் ஈடுபட அமெரிக்காவுக்குச் சென்றனர்.

மேலும், ஹெரி அரச குடும்பக் கடமைகளைக் கைவிட்டதிலிருந்து அரச குடும்பத்தைக் குறைகூறி வருவதாக பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, பிரித்தானிய இளவரசர் ஹெரி தன்னை அமெரிக்கவாசி என அறிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here