நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்று கூடிய நிறைவேற்று சபையில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இது தொடர்பான பிரேரணை ரோஹன லக்ஷ்மன் பியதாசவினால் சமர்ப்பிக்கப்பட்டு சரத் ஏக்கநாயக்கவினால் அங்கீகரிக்கப்பட்டது.
இதன்போது தலைவர் பதவியில் இருந்து தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறகுமாறு விஜேதாச ராஜபக்ஷவுக்கும் கோரிக்கைகள் வந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர், கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமித்துள்ளனர்.