இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோகினி மாரசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்கவின் கீழ் இயங்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடுநிலைமையுடனும், பாரபட்சமின்றியும் செயற்படுவது அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகின்றது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக, வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவிலும் ரோஹினி மாரசிங்க பணியாற்றுகிறார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் பணியாற்ற முடியாது என்ற காரணத்தினால் அவரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து நீக்க சதிகாரர்கள் முயற்சிப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.