சீனாவிடம் மனோ கணேசன் எம்பி கேட்ட பெருதவி!

0
125

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி, இலங்கை வந்துள்ள  சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் துணை அமைச்சர் சன் ஹையான் குழுவினரை சந்தித்தது. 

இச்சந்திப்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் திகாம்பரம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இதன் போது மனோ கணேசன்,

“இன்று உலக பொருளாதாரம் ஆசியாவை மையமாக கொண்டுள்ளது. இங்கே சீனா தலைமை பாத்திரம் வகிக்கின்றது.  இதற்கு மேலதிகமாக,  சீனா, இந்தியா, ரஷ்யா, தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் ‘பீரிக்ஸ்’ என்ற கூட்டமைப்பு உருவாகி உள்ளது. இந்த பிரபல பிரிக்ஸ் கூட்டில் இலங்கையும் எதிர்காலத்தில்  இடம்பெற சீனா உதவிட வேண்டும்” என சீன அமைச்சர் சன் ஹையானிடம் கோரிக்கை விடுத்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here