கர்தினால் மல்கம் ரஞ்சித் என்னை தூக்கிலிட விரும்புகிறார்!

0
199

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் கர்தினால் மல்கம் ரஞ்சித் பொறுமையிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

”இதேபோன்ற பயங்கரவாத தாக்குதல் விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டன.

விசாரணைகளை விரைந்து முடித்து, என்னை சிறைக்கு அனுப்பவோ அல்லது தூக்கிலிடவோ கர்தினால் ஆர்வமாக உள்ளார். விசாரணை முடியும் வரை காத்திருக்காமல் இந்த பாவத்தை செய்ய அவர் தயாராக இருக்கிறார்.

விசாரணையின் பல முக்கிய அம்சங்களில் பல விடை தெரியாத கேள்விகள் எஞ்சியுள்ளன. விசாரணைகளில் இலங்கைக்கு உதவிய பல உலகளாவிய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சில சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு முதல் இந்த விசாரணைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை சிந்திக்க வேண்டும்.

தாக்குதல் நடத்தியவரின் கைத்தொலைபேசியின் தரவுகளை வேறொரு நாட்டின் உளவுத்துறைக்கு கொண்டு செல்ல அனுமதித்தது யார்? தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலையாகிவிட்ட நிலையில், அவர்கள் என்னை மட்டும் தண்டனைக்கு உட்படுத்த துடிக்கிறார்கள். எனது ஆட்சியில் 160 சந்தேக நபர்களை கைதுசெய்தேன்.

மூன்று வாரங்களுக்குள் சஹ்ரானின் ஒட்டுமொத்த பயங்கரவாத அமைப்பையும் அழித்துவிட்டேன். தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்தியவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?” – என்றும் முன்னாள் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here