தந்தை செல்வாவின் நினைவேந்தல் தெல்லிப்பழையில்

0
48

தந்தை செல்வாவின் 47ஆவது ஆண்டு நினைவேந்தல் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தெல்லிப்பழையிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ,முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தந்தை செல்வாவின் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி ஈகை சுடர் ஏற்றப்பட்டது.

இதன்போது செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையினர், தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன், முன்னாள் பேராயர் ஜெபநேசன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலர் வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here