நெடுந்தீவில் கடந்த 22ஆம் திகதி வயோதிபர்கள் ஐவர் கொடூரமான முறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பத்துக்கு காரணமாகவிருந்த சந்தேகநபர் புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொலைச் சம்பவத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 100 வயது மூதாட்டி ஐந்து நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 3 தங்கச் சங்கிலிகள், 2 ஜோடி தங்க வளையல்கள், 8 மோதிரங்கள், ஒரு ஜோடி காதணிகள், ஒரு தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
N.S