கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேச ஆதரவு, எரிக் சொல்ஹெம் – ஆளுநர் செந்தில் இடையே விசேட சந்திப்பு

Date:

மே தின நிகழ்வுகள் நிறைவடைந்து 24 மணித்தியாலத்துக்குள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழலை உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற வைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை முறையாக பராமரிக்கும் சந்தர்ப்பத்தில்தான் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். இதனால் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

அதன் ஒரு முக்கிய கட்டமாக சுற்றுச் சூழல் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெம் மற்றும் நேர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஸு கிளாடி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சுற்றுச்சூழலை உருவாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

கிழக்கு மாகாண சுற்றுச்சூழல் சூழல் பாதுகாப்பு செயலாளர், திருகோணமலை, மட்டகளுப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர், பிரதேச சபை செயலாளர், நகரசபை செயலாளர் மற்றும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை இன்று முன்னெடுத்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...