பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்க ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆதரவாளர்களுடன் மோதலை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையிலேயே அவரது இராஜினாமா இடம்பெற்றுள்ளது.
தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரருக்கு வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.