இதுவரை 104 வீடுகள் தீ வைத்து எரிப்பு! 8 பேர் பலி

Date:

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன விசேட அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றுகையில்.

நாட்டை நேசிக்கும் இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் அவர்களது சகஜ வாழ்க்கை நிலைக்கு தடை ஏற்படாத வகையில் அமைதியை முன்னெடுப்பது மிக முக்கியமாகும்.

நேற்று (10) ஏற்பட்ட துர்ப்பாக்கிய சமபவத்தின் காரணமாக தாக்குதல், தீ வைப்பு மற்றும் மரணம் போன்ற துர்ப்பாக்கிய காட்சிகளை காண முடிந்தது. இவர்கள் அனைவரும் எமது நாட்டு பிஜைகள். இலங்கையர்கள் எத்தகைய அரசியல் கருத்துக்களைக்கொண்டிருந்த போதிலும் எத்தகைய அரசியல் கட்சியை சார்ந்திருந்த போதிலும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.

எனவே இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் அன்பானவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவெனில் வன்முறையிலான செயற்பாட்டை நிறுத்துங்கள். உங்களுக்கு தேவையான ரீதியில் ஜனநாயக ரீதியில் எவருக்கும் தீங்கு ஏற்படாத வகையில் ,சொத்துக்கள் அதாவது தனிப்பட்ட மற்றும் அரசாங்க சொத்துக்களுக்கு தீ வைக்காது அமைதியான முறையில் உங்களது போராட்டத்தை முன்னெடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு இல்லாது எமது நாட்டின் சகோதர மக்களின் ஒரு பிரிவை கொலை செய்து அல்லது தாக்கி அவர்களது சொத்துக்களை தீயிட்டு கொளுத்தி அழிக்க வேண்டுடாம். இவ்வாறு செயல்பட்டால் அதாவது சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட கடமைப்பட்டுள்ள நாம் அதாவது எம்மிடமிருந்து சட்டத்தை நீங்கள் கையில் எடுத்தால் எமது நாட்டுக்கு எதிர்காலம் இல்லை.இந்த நாடு உங்களுக்கே உரித்தானது.

அப்படியானால் அமைதியற்ற நிலையில் செயல்படுவதை நிறுத்தி உங்களது போராட்டத்தை அமைதியுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள். தற்போது பின்புலனான அரசு ஒன்று இல்லாததினால் அமைதியற்ற முறையில் செயல்பட்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கியும் சொத்துக்கள் பலவற்றுக்கு சேதம் விளைவித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் 104 இடம் பெற்றுள்ளன. 60 வாகன தீ வைப்புச் சம்பவங்களும் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்திய 40 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

எமது நாட்டுப்பிரஜைகள் 219 பேர்காயமடைந்துள்ளனர் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 2 பொலிசாரும் 6 பொது மக்களும் இதில் இடம்பெற்றுள்ளனர் என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...

கல்பிட்டி கடற்கரையில் ஒரு தொகை ஐஸ்

நேற்று (5) இரவு கல்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்தபோது...

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...