நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில், இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கும், பிரதமர் பதவியை ஏற்பதற்கும் தயார்.”
இவ்வாறு குறிப்பிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
ஜனாதிபதி பதவி விலகினால்தான், பிரதமர் பதவியை ஏற்பேன் என அடம்பிடித்துவந்த சஜித், தற்போது அந்த நிலைப்பாட்டில் தளர்வை மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இடைக்கால அரசை அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்ட நிலையிலேயே, சஜித் தரப்பு, இறுதி நேரத்தில் இந்த திடீர் நகர்வை மேற்கொண்டது.
எனினும் சஜித்தின் கோரிக்கையை ஏற்க ஜனாதிபதி மறுத்துள்ளதுடன் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்துள்ளார்.