புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு உள்நாட்டு மற்றும் உலகத் தலைவர்களிடம் இருந்து குவியும் வாழ்த்து!

0
303

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசியில் அழைத்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவும் வாழ்த்துக் கூறியுள்ளார்.

நாட்டின் பிரதமர் தினேஸ் குணவர்த்தன செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதீனும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய – தமிழ்நாட்டின் அயலக தமிழர்கள் விவகார அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொலைபேசி ஊாடாக புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீனாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் கிவ் சென்ஹொங் மற்றும் இலங்கை வந்துள்ள சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வெங் யுபோவும் ஆளுநராக பதவியேற்ற செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here