சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கு எதிர்ப்பு

0
77

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராகவும் நியமித்தமைக்கு எதிராக பலர் ஜனாதிபதியிடம்  ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

சிறந்த நிர்வாகியாக இருக்கலாம் மாகாணத்திற்குரிய அதிகாரத்தை மத்தியின் அதிகாரி கவனிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேநேரம் மாகாணத்தின் அதிகாரத்தில் மத்திய ,ரசாங்கம் நேரடியாக தலையீடு செய்வதற்கே இது வழி வகுக்கும் அதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பகிரங்க அறிக்கை வெளியிட்டார்.

இவ்வாறு எழும் நெருக்கடியின் மத்தியில் தற்போது மாகாணத்தில் பணியாற்றும் இரு வைத்திய அதிகாரிகளில் ஒருவரை நியமிக்குமாறு இருவரின் பெயர்கள் நேற்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here