சிங்கப்பூர், ஜப்பானுக்கான பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி!

Date:

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தூதுக்குழுவினருடன் இன்று நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

முதற்பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா உள்ளிட்ட குழுவினருடன் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதி, புறப்பட்டு சென்றுள்ளார்.

எதிர்வரும் மே 25 முதல் 26 வரை டோக்கியோவில் நடைபெறவுள்ள “ஆசியாவின் எதிர்காலம்-28” மாநாட்டில் ஜனாதிபதி மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...