டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
42

திருமணத்தை மீறிய உறவு குறித்து வெளியில் பேசாமல் இருக்க ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல் என்பவர் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இது பிரசாரத்தின் போது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தனது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு ரூ.1 கோடி பணம் வழங்கி அந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சி செய்தார்.

நடிகைக்கு பணம் வழங்கியதை தேர்தல் செலவு கணக்கில் டிரம்ப் சேர்த்துள்ளார். இதனால் போலியாக செலவை காட்டியதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து, மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவானவர்கள்.

எனவே வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று டிரம்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 34 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆனதால் ஜூலை 11-ல் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இந்த தீர்ப்பு அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here