அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் நோக்கி மாணவர்கள் எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.
மஹபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்குமாறும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்குமாறும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த பேரணி நடத்தப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியருகில் 100 மீட்டர் தூரம் வரை ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அவர்களை முன்னேறவிடாது தடுக்க பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதித் தடைகளை மேற்கொண்டிருந்தனர்.
எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
இங்கு பரஸ்பர கல்வீச்சு தாக்குதலும் இடம்பெற்றது.





















