பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்ய விசேட நிபுணர் இலங்கை வருகை

0
133

X-Press Pearl கப்பல் தீ விபத்திற்கு உள்ளாகி கடலில் மூழ்கியதால் கரையொதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்வதற்காக பிரித்தானியாவை சேர்ந்த விசேட நிபுணர் பேராசிரியர் ரிச்சர்ட் தாம்சன் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

புத்தளம், வத்தளை பிரதேசங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குறித்த பிளாஸ்டிக் கழிவுகளை அவர் ஆய்வு செய்யவுள்ளார்.

அத்துடன், அவருக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலியாவின் சட்டத்தரணி மிச்செல் டெய்லரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் ஊடாக நாட்டின் கரையோர வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை பேராசிரியர் ரிச்சர்ட் தாம்சன் தயாரிக்கவுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் இதற்கு முன்னரும் நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here