அநுர அணியின் இன்றைய போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

0
29

இராஜகிரிய தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (08) தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (01) பிரிவின்படி, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கட்சியின் உறுப்பினர்களான விஜித ஹேரத், லால்காந்த, டில்வின் சில்வா, சுனில் ஹதுன்னெத்தி, வசந்த சமரசிங்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே வீதி, கொட்டா வீதி, நாவல வீதி, சரண வீதி மற்றும் தேர்தல் காரியாலயத்தின் அணுகு வீதிகளில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ள தரப்பினரால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு மேற்கொள்ளப்படும் என வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here