கணிதம் தெரியாதோர் நாட்டை ஆட்சி செய்தால் மக்கள் நிலை இப்படித்தான் – டட்லி தாக்குதல்

0
20

கணிதம் தெரியாதவர்கள் நாட்டை ஆள்வதன் விளைவே இன்று நாடு அழிவை நோக்கி சென்றுள்ளதாக பாரிய அரிசி உற்பத்தியாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இரசாயன உரப் பாவனையை ஒழித்து, கரிம உரங்களைக் கொண்டு பயிரிடத் தீர்மானித்தபோது, ​​அதன் முடிவுகளை கணித ரீதியாக விளக்கியதாகவும் ஆனால் அந்த முடிவுகளை எடுத்த எவரும் அதனைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் சிறிசேன தெரிவித்தார்.

அந்த முடிவுகளே நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் என அவர் விளக்கமளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here