விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை திருத்தியமைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (21) பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.
வீசாவைக் காலம் கடந்து தங்கியிருப்பவர்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு 500 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதுடன், புதிய திருத்தத்தின்படி, அதிக காலம் தங்கியிருக்கும் முதல் 07 நாட்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.
முதல் 07 நாட்களுக்குப் பிறகு, அடுத்த 07 நாட்களுக்கு விசா கட்டணத்துடன் கூடுதலாக US$ 250 அபராதம் விதிக்கப்படும்.
விசா காலம் முடிந்து 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால், விசா கட்டணத்துடன் கூடுதலாக US$ 500 அபராதம் விதிக்கப்படும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அதிகளவு அபராதம் விதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிநாட்டவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்த பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.