கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பில் நகர வர்த்தகக் குழுவை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு விரைவாக மீண்டு வருவதாகவும் இது புதிய நம்பிக்கையை தருவதாகவும் நகர வர்த்தகக் குழு ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு தமது நன்றியையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி பணிக்குழு பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டார்.



