மீண்டும் அரசியல் களத்தில் மேர்வின் சில்வா, பைத்தியம் என்று கூறிய மைத்திரியுடன் இணைவு

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.

சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த மேர்வின் சில்வா, அவ்வப்போது கட்சி மாறுவதில் பெயர் பெற்ற அரசியல் பிரமுகர்.

2015ஆம் ஆண்டு தோல்வியின் பின்னர் அரசியல் களத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட மேர்வின் சில்வா, 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் மௌனமாக இருந்த சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து மீண்டும் அரசியலுக்கு வருகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....