பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி

0
126

பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூன் 4] நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடக்கம் முதலே இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் பின்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பிரதான இடதுசாரி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான 326 இடங்களையும் கடந்து 408 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தொழிலாளர் கட்சி 410 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் வெற்றி பெரும் எனவும் கணிக்கப்பட்டது குறிப்பிடத்தத்க்கது.

பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து கடந்த 14 வருடங்கள் கழித்து தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் கெயர் ஸ்டேமர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

வெற்றி குறித்து பேசிய கெயர் ஸ்டேமர், தேச புத்தாக்கத்துக்காக நாங்கள் பாடுபடுவோம் என்றும், நாடுதான் முதலாவது, கட்சி இரண்டாம் பட்சம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு தான் முழு பொறுப்பேற்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ரிசிமண்ட் மற்றும் நார்தலெர்ட்டான் தொகுதிகளில் போட்டியிட்ட ரிஷி சுனக் அங்கு வெற்றி பெற்று தனது எம்.பி பதவியை தக்கவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here