1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்

0
214

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேற்று (05) நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக அதிகரிப்பது தொடர்பில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுத்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்தது.

கம்பனிகளோடு எந்தவொரு பேச்சுவாரத்தையும் செய்யமால் வர்த்தமானி வெளியிட்டது ஒரு முட்டாள்தனமான செயற்பாடு. இது தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றும் செயற்பாடகவே உள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பு விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எனது எங்கள் அனைவரினதும் ஆசையாக இருக்கிறது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here