வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 14.5% மற்றும் 15.5% ஆக 100 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சட்டப்பூர்வ கையிருப்பு விகிதத்தை தற்போதைய 4.00% அளவில் பராமரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.