ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

Date:

வெள்ளிக்கிழமை (8) மற்றும் சனிக்கிழமை (9) ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் ஊடாக கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய உத்தரவு பிறப்பிக்க மறுத்த கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, எந்தவொரு குற்றச் செயலையும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சட்டவிரோதமாக ஒன்றுகூடி வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பாரிய போராட்டத்தை நடத்துவதற்கு தயாராகி வருவதாக பொலிஸ் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைகளுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், கருத்துச் சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடும் உரிமை உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்தும் பொலிஸாரின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 95, 96 மற்றும் 97 இன் படி, குற்றச் செயல்களில் ஈடுபடும் பட்சத்தில், தேவையான நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்ட மேலதிக நீதவான், பொலிஸாரின் கோரிக்கையை நிராகரிக்க தீர்மானித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...

செம்மணியில் இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதி மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன்,...

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று!

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று (30)...

இன்றைய வானிலை நிலவரம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...