ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்கக் கோரும் மனு: நிராகரித்தது உயர்நீதிமன்றம்

Date:

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அத்துடன் நீதிமன்றக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபா செலுத்துமாறும் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றக் கட்டணத்தை ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும் எனவும் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற ஆயம் இந்த உத்தரவைப்  பிறப்பித்தது.

இந்த மனுவைத் தொழிலதிபர் சி.டி.லெனவ சமர்ப்பித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...