உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

Date:

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை பயன்படுத்த நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படுமானால், அது உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வை ஏற்படுத்தும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே எச்சரித்துள்ளார். 

இறக்குமதிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டன. 

இதனடிப்படையில் வாகன இறக்குமதிக்காக சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள வங்கி நாணயக் கடிதங்களை நிதி நிறுவனங்கள் திறந்துள்ளன. 

இந்தநிலையில், மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டமிட்டபடி இறக்குமதிக்குக் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். 

எனினும், வாகன இறக்குமதி விடயத்தில் தேவையற்ற பயம் உருவாக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். 

வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி வரம்பை நீக்குவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...

செம்மணியில் இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதி மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன்,...

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று!

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று (30)...

இன்றைய வானிலை நிலவரம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...