மட்டக்களப்பில் தோண்டப்பட்ட ஆயுதக்கிடங்கு – பெருமளவான ஆயுதங்கங்களும் வெடிபொருட்களும் மீட்பு

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான ஆயுதங்கங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் ​நேற்று (10) விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20,000 ரி56ரக துப்பாக்கி ரவைகளும் 300 கண்ணி வெடிகளும், 38 வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடைப்படையின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜயசுந்தர அவர்களின் கீழான அம்பாறை கட்டளைத்தளபதி உதவி கட்டளை அதிகாரி பீ.குணசிரி அவர்களின் தலைமையின் கீழானதுமான மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டடிபிள்யு ஏ.ஏ.பி.சம்பத் குமார அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் குறித்த அகழ்வுப்பணி ​நேற்று இடம்பெற்றது.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி. லக்மல் குமார, கல்லடி , களுவாஞ்சிகுடி, வவுணதீவு அகிய பிரிவுகளின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வுப்பணியினை நேற்று மேற்கொண்டனர்.

இதன்போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன், வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிஸார் பொறுப்பேற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...