நாட்டின் அரசியல் யாப்பு சட்டதிட்டங்களுக்கு அமைய நாட்டு நிர்வாகத்தை முன் கொண்டு செல்லும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் அவர் இன்று 13 ஆம் திகதி பதவி விலகுவது தொடர்பில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி பதவி விலகும் போது பிரதமர் இரண்டு வாரங்களுக்கு பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்ற அரசியல் யாப்பு விதிமுறைகளுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.