ஜனாதிபதித் தேர்தலின் அச்சுப் பணிகளுக்காக அதிகபட்சமாக 600 முதல் 800 மில்லியன் ரூபா வரை செலவிடப்படும் என அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவு அதிகாரி கங்கா கல்பானி லியனகே தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து தொகை குறையக்கூடும் என்று அவர் கூறினார். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பான பத்திரங்கள் அச்சிடப்படும் என அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தேர்தலின் போது அரசாங்க உத்தியோகத்தர்களை கடமைக்கு பயன்படுத்தியமை தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அச்சக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.