சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார்.
69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி வெளியேறினால், 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் என்றும் அவர் கூறினார்.