அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் உறுதி! செலவுகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

Date:

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை உள்ளடக்கி அதற்கான பணத்தை ஒதுக்குமாறும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நிதியமைச்சுக்கு அறிக்கை அனுப்புமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் தொடர்பான உரிய மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...