சுகாதாரத்துறை அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் என அரசியல் களத்தில் பரவி வரும் செய்திகளுடன், அந்த அமைச்சு பதவியை பெற அரசியல் சண்டையும் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துகொள்ளக் காத்திருக்கும் மூத்தவரும், ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக செயற்படும் ஒருவரும் தனக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குமாறு உத்தியோகப்பற்றற்ற முறையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்கள் என்றும் கூறப்படுகிறது.
எனினும், ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் இருந்து, இந்த இருவருக்கும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
அப்படி இருந்தும், நாடாளுமன்றத்தில் சுதந்திர சபை என்ற குழுவில் உள்ள சிறப்பு மருத்துவரிடம், சுகாதாரத் துறையின் கண்காணிப்புப் பொறுப்பை ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் ஒரு கதை உள்ளது.
இதற்கிடையில், கெஹலிய ரம்புக்வெல்ல தனது சுகாதார அமைச்சர் பதவியை பாதுகாக்க பெரிய சமூக ஊடக பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.