ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதவி விலக வேண்டும் எனவும், அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
மக்கள் போராட்டத்தால் சோர்வடையவில்லை என்றும் போராட்ட களத்தில் இருந்து வரும் செய்திக்காக மக்கள் காத்திருப்பதாகவும் அதன் பிரதிநிதி சுசந்த கொடித்துவக்கு கூறுகிறார்.
புதிய ஜனாதிபதி போராட்டத்தினால் தெரிவு செய்யவில்லை மாறாக சதியால் தெரிவு செய்யப்பட்டதாக கூறும் அவர், மக்கள் பலம் இல்லாத ஜனாதிபதி மக்களிடம் வெறுப்பு கொண்டவர் எனவும் கூறியுள்ளார்.
மிக விரைவில் இடைக்கால அரசாங்கம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இணைய தளம் ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.