செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ்நாட்டில் போராட்டம்

Date:

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஈவு, இரக்கமின்றி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பங்கள் சிங்கள ராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது. உலக நாடுகள் அனைத்தையும் இந்த சம்பவம் உலுக்கியது. இருப்பினும் உள்நாட்டு போரில் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

இதற்கிடையே தான் கடந்த பிப்ரவரியில் செம்மணி இந்து மயானத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. அகழாய்வு பணி தொடங்கியபோது இன்னும் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. 65க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கிடைத்தன. இதில்குறைந்தது மூன்று குழந்தைகளின் எலும்புகள் என்பது உறுதி செய்ப்பட்டது.

ஒரு குழந்தை தனது தாயை கட்டிஅணைத்தபடியும், இன்னொரு குழந்தை பள்ளிக்கூட பையுடனும் இருந்தது. விளையாட்டுப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது. இது தற்போது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. சில எலும்புக்கூடுகளில் துப்பாக்கிக் குண்டுத் துளைத்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

இந்த காட்சிகள் என்பது இலங்கையில் அப்பாவிகள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டதை காட்டும் வகையில் உள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு தற்போது உலகை மீண்டும் அதிர வைத்துள்ளது. தமிழர்களை மீண்டும் உலுக்கி உள்ளது.

இந்த சம்பவத்தை “ஒன்இந்தியா தமிழ்” சிறப்பு நிருபர் கஜிந்தன் நேரடியாக களத்தில் இருந்து செய்தி சேகரித்து வருகிறார். இது குறித்த தொடர் கட்டுரை, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு தலைவர்களும் இந்த விவகாரத்தில் கையில் எடுத்து பேச தொடங்கி உள்ளனர். செம்மணி புதை குழிகளுக்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தான் செம்மணிப் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் செம்மணி படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

செம்மணி புதைக்குழிக்கு நீதி வேண்டும். செம்மணி எங்கும் தமிழர் குருதி உள்ளது. சிங்களர் செய்த தமிழர் அநீதிக்கு நீதி வேண்டும். தோண்ட தோண்ட எலும்பு கூடு.. பார்க்க பார்க்க நொறுங்குது இதய கூடு.. இன்னும் எத்தனை சாட்சி வேண்டும்.. இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும்.. ஐநா உரிமை ஆணையமே.. நீதி வழங்க மறுக்காதே.. இனியும் மவுனம் காக்காதே.. இந்திய அரசே.. மத்திய அரசே.. குரல் கொடு.. குரல் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு குரல் கொடு.. தமிழக அரசே தமிழக அரசே.. அழுத்தம் கொடு அழுத்தம் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடு.. ” என்று கோஷமிட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி...

1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை...

சிறுமியின் கையில் இருந்த பொம்மைக்குள் போதை பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

செம்மணி மனித புதைகுழியில் சிறு குழந்தையின் எலும்பு கூடு!

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் எலும்பு கூட்டு...