ரணிலும் சஜித்தும் ஒரே குட்டையில்ஊறிய மட்டைகள்!

Date:



“வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கோ நான் ஆதரவு வழங்கமாட்டேன்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ரணிலும், சஜித்தும் சுயநலவாதிகள் என்றும், இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றும் அவர் சாடினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கே தான் ஆதரவு வழங்குவேன் என்றும் அவர் அறிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மைத்திரிபால இந்த அறிவிப்பை விடுத்தார்.

“விஜயதாஸ ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்தான். அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன். நாட்டுக்காகத் துணிந்து செயற்படும் அரசியல்வாதியே அவர்.” – என்றும்  மைத்திரிபால மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

வாகன இறக்குமதி குறையவில்லை

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி...

பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது...

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...