நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை

Date:

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை (29) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

அதன்படி, 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா எதிர்வரும் ஒகஸ்ட் 19ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர்த் திருவிழா ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் நிகழ்த்தப்படுவதோடு, மகோற்சவம் நிறைவுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொரளை விபத்துக்கு காரணம் கஞ்சா!

பொரளை, கனத்த சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...

மூன்று பொலீசார் பணி நீக்கம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்...

பொரளை விபத்தில் ஒருவர் பலி

பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்...

புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி...