அரச நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாண சபையால் நிர்மாணிக்கப்பட்டு தொழிற்சாலை திட்டத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கட்டிடம் செயலிழந்து காணப்படுகின்றமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனம் செலுத்தியுள்ளார்.
குறித்த தொழிற்சாலை 58 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2019ம் ஆண்டு தொழில் வாய்ப்புக்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த சில காலமாக குறித்த தொழிற்சாலை கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
இதுகுறித்து கிழக்கு மாகாணஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கு அதிகாரிகளுடன் நேரடி விஜயம் செய்த ஆளுநர், இக்கட்டிடம் குறித்த முழுமையான அறிக்கையை தனக்கு வழங்குமாறு தொழிற்துறை திணைக்களத்திற்கு பணிப்பு விடுத்துள்ளார்.






