குரங்கம்மை பாதிப்பு, முதல் மரணம் பதிவு

Date:

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கேரள மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 22ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பினார். வீடு திரும்பியதும், அருகில் இருந்த கால்பந்து மைதானத்தில் கால்பந்து விளையாடினார்.

இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில், அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அவரது உடல் குரங்கம்மை பாதிப்பாளர்களின் மரணம் தொடர்பான நிலையான வழிகாட்டுதலின் அடிப்படையில் இறுதி அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தத் தகவலை கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்-ம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவவில்லை, உயிரிழப்பும் பெரிதளவில் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த உயிரிழப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கம்மைக்கு இந்தியாவில் பலியான முதல் உயிர் இதுதான். ஆப்ரிக்காவுக்கு வெளியே இது 4ஆவது உயிரிழப்பு ஆகும் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...