சேனல் 4 வெளியிட இருந்த ஞாயிறு தாக்குதல் ஆவண படத்திற்கு நடந்தது என்ன..?

0
81

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான ஆவணப்படம் பிரித்தானிய நேரப்படி இன்று (15) இரவு 7.00 மணிக்கும் இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கும் பிரித்தானியாவின் சேனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

ஆவணப்படம் அவர்களின் மாலை செய்தி ஒளிபரப்பின் போது ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆவணப்படம் இன்று ஒளிபரப்பப்படாது என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அறிவிப்பாளரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது தெரியவந்த உண்மைகளின்படி, அவரது நம்பகத்தன்மையில் கடும் சிக்கல் எழுந்துள்ளதாகவும், இதனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் போகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கை வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி உட்பட பலர் கருத்து வெளியிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here