வறட்சியால் நீர் குறைவு, வடக்கு கிழக்கில் அதிக பாதிப்பு

0
253
Sri Lankan young boy drinking a fresh water and looking at camera, Ceylon.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் சுதர்ஷனி விதானப்பத்திரண கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் வறட்சியினால் நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 15 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 75,287 பேர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here